Tuesday, May 17, 2022

பந்தங்கள்

 


உள்ளங்கள் இரண்டு உடலகளும் தனி தனி ஆனால் பாச உணர்வு ஒன்று தானே ..அதே தாய் தந்தையின் அரவணைப்பில் வாழ்ந்து ஆளான பந்தங்கள் இல்லவா இது ...நம்ம சுக துக்கங்களில் பொங்கி எழுந்த மனம் நமக்கு பரிச்சயமானது தானே ...ரத்த பந்தங்கள் ஒரே மாதிரி தானே உள்ளன ..


எப்பொழது திசை மாரி போகிறது இந்த அன்பு காற்று ...நம்பிக்கையை சான்றிதல்களில் பார்க்க ஆசை படும் காலம் இது ..அன்பின் பரிபாஷை மாரி போக கரணம் தேடும் மனசு.. கசியும் உள்ளம்  தவிக்க காரணமான முள் வெளி இது தானா ?


மலர்கள் முள்ளோடு தான் பராமரிக்க படுகின்றன...சில நேரங்கள் முள்களோடு போராடி தன் எதிர்ப்பு சக்தியை கைவிட்டு  பூக்களும்  திசை மாறி தன் இயற்கை தன்மையை மறந்து போகின்றன ..


ஒரு வாழ்கை தந்த பந்தங்கள் கேள்விக்குறியாக மாற காரணம் பரம ரகசியம் இல்லை ...முடிந்த காலம் முடிந்த கதை ..வாழ்க்கையின் சிறப்புஅமசங்கள் மறந்து போகும் மனிதர்களும் மனசுகளில் இருந்து மறைந்து போகிறார்கள் ....

No comments:

Post a Comment

நேரம் நல்ல நேரம் ....

  நேரம் நல்ல நேரம்  ----------------------------- எல்லாம் வாய்த்த நேரம் ...கடவுள் கொடுத்த நேரம் ..மனிதன் தான் வினாக்குகிறான் கிடைத்த நேரம் ....