Tuesday, January 3, 2023

என்றென்ரும் பதினாறு............




என்றென்ரும் பதினாறு  
-------------------------------------------------------------


நினைத்தாலே இனிக்கும் இந்த வாக்கியத்தில் மனதை பறிகொடுத்து வாழ்நாள் முழுதும் வாழ்ந்து விடலாம் என்று நினைக்கும் மனம் தன்னையே மறந்து போகிறது ...

காலம் சிறையடித்து பறந்து போகும் போது அதோட காற்று போகும் திசையில் செல்லும் பொது தான் தன் செயலாகாத தன்மையை உணர்ந்து போராடுகிறது மனம் ...

போராட்டம் உள்ளுக்குள் தான் நடக்கிறது...ஏங்கும்  மனம் தன்னை பறிகொடுத்து  அவஸ்தை படும் போது தான் அறிகிறது ... ஆனால் வீதியின் விளையாட்டு நடந்தே திருகிறது ..காலதோடு வாழ்க்கையின் திசையும் மாறுகிறது ...

ஒரு யுகத்திற்கு பிறகு தான் அகத்தின் அழகை ரசிக்கும் தன்மை பெறுகிறது, எத்தனை கண்களுக்கு  இதை கானும் பாக்கியம் கிடைக்கிறது..கிடைக்கும் போது  தான் உனர முடிகிறது ...வாழ்நாள் முழுதும் கண்ணாடியில் ரசித்து மகிழ்ந்த மனத்தின் ஏமாற்றம் ...

இறைவன் படைத்த படைப்புகளில் மனிதன் தான் பாக்கியசாலி , உலகத்தை அனுபவிக்கும் சவுபாக்கியம் பெறுகிறான்...பல போராட்டங்களில் தன்னை ஜெயித்து இறைவனின் அருளை  பெருகிறான் ....தன் ஜனமிக்க்கும்  காரணத்தை அறியும் அவகாசம் பெறுகிறான் ....

ஆதலால் இந்த அவகாசம் கிடைத்ததற்கு நன்றி  செலுத்தும் முறை என்னவென்றால் காலகட்டங்களின் மாறுதல்களை அரவணைத்து வாழ்க்கையின் முக்கிய அத்தியாயத்தை அன்போடு கொண்டாடுங்கள் ...

மனிதத்தன்மை தான் அழகின் பரிபாஷை ...மனம் தான் பொக்கிஷம் ...முகம் ஒரு முகமூடி ...உள்நோக்கி செல்லும் கண்கள் எல்லாரும் பெற வாய்ப்பு கிடைப்பதில்லை ...

ஆதலால் கிடைக்கும் காலத்தை பரிபூர்ணமாக உணர்ந்து சந்தோஷங்களை பரிமாறுங்கள் ...

No comments:

Post a Comment

நேரம் நல்ல நேரம் ....

  நேரம் நல்ல நேரம்  ----------------------------- எல்லாம் வாய்த்த நேரம் ...கடவுள் கொடுத்த நேரம் ..மனிதன் தான் வினாக்குகிறான் கிடைத்த நேரம் ....