Wednesday, April 12, 2023

நலம் நலம் அறிய ஆவல்

 


நலம் நலம் அறிய ஆவல் .....இந்த கடிதம் கிடைத்ததும் பதில் அளிக்கவும் ....

ஆர்வதோடு எதிர் பார்க்கும் உள்ளங்கள் வாசல் கதவில் சாய்ந்து துரத்தில் இருந்து வரும்  தபால்காரனை எதிர்நோக்கி இமைகளை மூட மறந்து பார்த்து கொண்டு இருந்த காலம் கழிந்து விட்டது ... 

அது ஒரு காலம் ....போன் ,இன்டர்நெட் ,லேப்டாப் ஈமெயில் இல்லாத காலம்..நினைத்த உடன் தொலைபேசி பேச வாய்ப்பு கொடுத்து விட்டது...ஏங்க வேண்டிய அவசியம் இல்லை..ஆசைக்கு எல்லையும் இல்லை...சந்தோஷங்கள் நொடியில் பரிமாற படுகின்றன ....

ஆனால் உள்ளங்களில் அந்த நேசம் ஏக்கம் நடப்பு நாடி செல்லும் ஆர்வம் எங்கோ மறைந்து விட்டது ...தான் தன் சுகம் என்று தன்னை ஏமாற்றி காலம் கழித்து ஏதோ வந்தோம் போனோம் என்று வாழ்க்கையின் அத்தியாயங்களை வீணாகி சென்று விடுகிறாரகள் ...

வாழ்க்கை திசை மாறி விட்டது...உணர்ச்சிகள் மரத்து போன காலம் இது ....சொந்தம் பந்தம் உதடுகளில் இருந்து மனசுக்கு செல்லும் பாதை மறந்து போனது ....உலகம் முன்னேறியது ..ஆனால் மனிதன்.....தன்னை மறந்து காலப்போக்கில் தன்னை பறி கொடுத்து திசை அறியாத பறவை போல  காற்று சுழியில் சிக்கி நிம்மதியில்லாமல் அவஸ்தை படுகிறான் ..

வாழ்க்கை அடிக்கடி அவகாசம் கொடுப்பதில்லை .....ஒரு நொடி நிதானம் தியானம் பெற்றால் சிந்தனைக்கு அவகாசம் கொடுத்து பாருங்கள்.நிம்மதி உங்களை தானே நாடி வரும் ..

No comments:

Post a Comment

நேரம் நல்ல நேரம் ....

  நேரம் நல்ல நேரம்  ----------------------------- எல்லாம் வாய்த்த நேரம் ...கடவுள் கொடுத்த நேரம் ..மனிதன் தான் வினாக்குகிறான் கிடைத்த நேரம் ....