Wednesday, May 31, 2023

நேரம் நல்ல நேரம் ....

 


நேரம் நல்ல நேரம் 

-----------------------------

எல்லாம் வாய்த்த நேரம் ...கடவுள் கொடுத்த நேரம் ..மனிதன் தான் வினாக்குகிறான் கிடைத்த நேரம் ..தன்னை பற்றியே சிந்தித்து காலத்தை களைத்து விட்டால் தன்னை படைத்தவனின் திருவிளையாட்டை எப்படி புரிந்து கொள்ளுவான் ..தனக்குள் வசிக்கும் வாசிக்கும் இறைவனின் பொன்மொழி எப்பிடி கேக்க போகிறான் ...

பாதி கழிந்து விட்டது மிதி மறந்து விட்டது ...ஆனால் இறைவன் எதுவும் மறப்பதில்லை.தன் படைப்பின் தன்மைகள் புரிந்து தான் செயல் படுகிறான் ...அதையாவது புரிந்து கொள் அன்பனே ...

விடிந்ததும் கழிந்து விடுகிறது ஒரு தினம் ..மரு தினம் ஒரு நப்பாசை ...கிடைத்தால் அவகாசம் .. இறைவனுக்கு நன்றி செலுத்தும் ஒவ்வரு நிமிடமும் பொக்கிஷம் ...

கால கட்டங்கள் நேர்பிக்கும் போதனைகள் வருங்காலத்துக்கு பரிமாறி செல்லுங்கள்..போன் நேரத்தை  வீணாக்காதீர்கள் ..உங்களுக்கு கிடைத்த மகிமையை கொண்டாடுங்கள் ..

Wednesday, April 12, 2023

நலம் நலம் அறிய ஆவல்

 


நலம் நலம் அறிய ஆவல் .....இந்த கடிதம் கிடைத்ததும் பதில் அளிக்கவும் ....

ஆர்வதோடு எதிர் பார்க்கும் உள்ளங்கள் வாசல் கதவில் சாய்ந்து துரத்தில் இருந்து வரும்  தபால்காரனை எதிர்நோக்கி இமைகளை மூட மறந்து பார்த்து கொண்டு இருந்த காலம் கழிந்து விட்டது ... 

அது ஒரு காலம் ....போன் ,இன்டர்நெட் ,லேப்டாப் ஈமெயில் இல்லாத காலம்..நினைத்த உடன் தொலைபேசி பேச வாய்ப்பு கொடுத்து விட்டது...ஏங்க வேண்டிய அவசியம் இல்லை..ஆசைக்கு எல்லையும் இல்லை...சந்தோஷங்கள் நொடியில் பரிமாற படுகின்றன ....

ஆனால் உள்ளங்களில் அந்த நேசம் ஏக்கம் நடப்பு நாடி செல்லும் ஆர்வம் எங்கோ மறைந்து விட்டது ...தான் தன் சுகம் என்று தன்னை ஏமாற்றி காலம் கழித்து ஏதோ வந்தோம் போனோம் என்று வாழ்க்கையின் அத்தியாயங்களை வீணாகி சென்று விடுகிறாரகள் ...

வாழ்க்கை திசை மாறி விட்டது...உணர்ச்சிகள் மரத்து போன காலம் இது ....சொந்தம் பந்தம் உதடுகளில் இருந்து மனசுக்கு செல்லும் பாதை மறந்து போனது ....உலகம் முன்னேறியது ..ஆனால் மனிதன்.....தன்னை மறந்து காலப்போக்கில் தன்னை பறி கொடுத்து திசை அறியாத பறவை போல  காற்று சுழியில் சிக்கி நிம்மதியில்லாமல் அவஸ்தை படுகிறான் ..

வாழ்க்கை அடிக்கடி அவகாசம் கொடுப்பதில்லை .....ஒரு நொடி நிதானம் தியானம் பெற்றால் சிந்தனைக்கு அவகாசம் கொடுத்து பாருங்கள்.நிம்மதி உங்களை தானே நாடி வரும் ..

Tuesday, January 3, 2023

என்றென்ரும் பதினாறு............




என்றென்ரும் பதினாறு  
-------------------------------------------------------------


நினைத்தாலே இனிக்கும் இந்த வாக்கியத்தில் மனதை பறிகொடுத்து வாழ்நாள் முழுதும் வாழ்ந்து விடலாம் என்று நினைக்கும் மனம் தன்னையே மறந்து போகிறது ...

காலம் சிறையடித்து பறந்து போகும் போது அதோட காற்று போகும் திசையில் செல்லும் பொது தான் தன் செயலாகாத தன்மையை உணர்ந்து போராடுகிறது மனம் ...

போராட்டம் உள்ளுக்குள் தான் நடக்கிறது...ஏங்கும்  மனம் தன்னை பறிகொடுத்து  அவஸ்தை படும் போது தான் அறிகிறது ... ஆனால் வீதியின் விளையாட்டு நடந்தே திருகிறது ..காலதோடு வாழ்க்கையின் திசையும் மாறுகிறது ...

ஒரு யுகத்திற்கு பிறகு தான் அகத்தின் அழகை ரசிக்கும் தன்மை பெறுகிறது, எத்தனை கண்களுக்கு  இதை கானும் பாக்கியம் கிடைக்கிறது..கிடைக்கும் போது  தான் உனர முடிகிறது ...வாழ்நாள் முழுதும் கண்ணாடியில் ரசித்து மகிழ்ந்த மனத்தின் ஏமாற்றம் ...

இறைவன் படைத்த படைப்புகளில் மனிதன் தான் பாக்கியசாலி , உலகத்தை அனுபவிக்கும் சவுபாக்கியம் பெறுகிறான்...பல போராட்டங்களில் தன்னை ஜெயித்து இறைவனின் அருளை  பெருகிறான் ....தன் ஜனமிக்க்கும்  காரணத்தை அறியும் அவகாசம் பெறுகிறான் ....

ஆதலால் இந்த அவகாசம் கிடைத்ததற்கு நன்றி  செலுத்தும் முறை என்னவென்றால் காலகட்டங்களின் மாறுதல்களை அரவணைத்து வாழ்க்கையின் முக்கிய அத்தியாயத்தை அன்போடு கொண்டாடுங்கள் ...

மனிதத்தன்மை தான் அழகின் பரிபாஷை ...மனம் தான் பொக்கிஷம் ...முகம் ஒரு முகமூடி ...உள்நோக்கி செல்லும் கண்கள் எல்லாரும் பெற வாய்ப்பு கிடைப்பதில்லை ...

ஆதலால் கிடைக்கும் காலத்தை பரிபூர்ணமாக உணர்ந்து சந்தோஷங்களை பரிமாறுங்கள் ...

Saturday, December 24, 2022

நிரந்தரம்

 



நிரந்தரம் 

------------------

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை என்று தெரிந்தும் அதை மறந்து மனம் போகும் போக்கில் வாழ்ந்து கலைத்து போகும் பொது தான் அதன் மகிமை தெரிகிறது...

ஆனால் அவகாசம் கிடைப்பதில்லை ....சாக்கு போக்கு சொல்லி தன்னை ஏமாற்றலாம் ஆனால் படைத்தவனை ஏமாற்ற முடியுமா ? அப்படியும் நினைத்து சிலர் வாழ்ந்து கிடைக்கும் அவகாசத்தை வீணடித்த விடுகிறாரகள் .

நான் ஆசை படும் என் ஆசை என்ன வென்றால் மனிதர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு வாழ்க்கையை பரிபூர்ணமாக உணர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து அந்த சந்தோஷதை பகிர்ந்து வாழ்க்கை என்ற போன் காலத்தை கொண்டாடி கிடைக்கும சந்தோஷத்தில் ஆண்டவனின் அருளை காணலாம் ...

நாளை நமதா என்று தெரியாத பொது வருங்காலத்தின் பேராசைகளில் முழுகி இன்றை வீணாகி சென்று விடுகிறார்கள் மனிதர்கள் ..ஆதலால் இந்த நொடியை கொண்டாடுங்கள் அன்பர்களே ....

Tuesday, November 29, 2022

சந்தர்ப்பம்

 


சந்தர்ப்பம் 

--------------------

எத்தனை பேருக்கு கிடைக்கிறது ..கிடைத்தும்  எத்தனை பேர்  சாதனை படைக்கும் தன்மை பெறுகிறார்கள் ...மனதிடம், மனப்பக்குவம் ,மனவிளக்கம் , சுகாதார நிலையை நாடி செல்லும் மனித தன்மை... இதை வரவேற்கும் மனம்...தன் ஆசாபாசங்க்ளின் பிடியில் சிக்காமல் தன் குறிக்கோளை நாடி செல்லகிறது ....

மனித பிறவியின் படைப்பின் ரகசியம் மனதில் தான் அடங்கி இருக்கிறது ...தன்னை ஜெயிக்கும் தன்மை கொண்ட மனம் தான் கடவுள் வசிக்கும், வாசிக்கும் இடம் ....உலகத்தின் உல்லாசங்களின் பிடியில் இருந்து நலவி உள்நோக்கி சென்று பாருங்கள்...பரமானந்தம் வசிக்கும் உலகத்தின் அழகு,உலகத்தை மாற்றி படைக்கும் மகிமைய் நிரந்தர சந்தோஷத்தின் சிகரத்தை தொடும் புத்துணர்ச்சியை மனம் பெறுகிறது..

ஆதலால் இந்த லோகம் நிரந்தரமானது இல்லை  என்று தெரிந்தும் கண்முடிதனமாக தன்னையே ஏமாற்றி காலத்தை கழித்து கிடைக்கும் அவகாசத்தை  இழந்து விடாதீர்கள்...

Monday, October 3, 2022

வாழ்வே மாயம் ......

 

வாழ்வே மாயம் என்று உணர்ந்து தான் வாழ்க்கையின் மாய ஜாலத்தில் தன்னை பறிகொடுத்து காலப்போக்கில் வாழ்ந்து வாழ்க்கையை வீணடித்து இருக்கிறார்கள் மனிதர்கள், மனிதர்கள் மனதை மட்டும் மறந்து போனார்கள் ....

சிந்தனையின் ஒரு நொடி சாதனைகள் படைக்க காரணமாகிற அந்த நொடியை நாடி செல்ல அவகாசம் கொடுக்காமலே வாழ்க்கையின் ஒரு முக்கிய அத்தியாயத்தை அழித்து , கழித்து விட்டார்கள் ...

கடவுளின் அருளை பெற்றவர்களுக்கு தான் தெரியும் அந்த நொடியின் மகிமை ...தெரிந்தும் அந்த நோடியை பரிபூர்ணமாக உணர்ந்து தன்னை சமர்ப்பிக்கும் தருணம் கிடைக்க வழிகாட்டியாக மாறிய அந்த நொடியே நாடி போகும் போது தான் நான் என்ற தன்னை உணர முடிகிறது ....

Friday, June 10, 2022

சிந்தனை ..




வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்கள் , அதை வழிகாட்டியாக மாற வழியில்லாமல் தவிக்கும் உள்ளங்கள், சிதறி போகும் சிந்தனை , உள்ளுக்குள் பொங்கி அமுங்கும் அலைகள், ஒயிவு இல்லாமல் இயங்கும் இதயம் , தயங்கி தயங்கி போராடி கலைத்து ஒரு நாள் மற்ற உள்ளங்களை  நாடி செல்கின்றது ..


அங்கேயும் ஏமாற்றம் தான் கிடைக்கிறது ..எல்லாரும் திசையறியா பறவைகளாக தன் போக்கில் பறந்து தன் லட்சியத்தை மறந்து காலம் கழித்து விடுகின்றன ...பயணம் நிரந்தரமானது  இல்லை என்று தெரிந்தும் முடிவு காண பயப்படும் மனம் அது தொடரும் என்று  வீன் கனவு கான்கிற மனம் திடிர் என்று பிரேக் அடிக்கும் போது தான் உணர்க்கிறது ...இது தான் முடிவு என்று ....


முடிவுகளை தவிர்க்க முடியாது ...ஆனால் ஆரம்பம் பலனுள்ளதாக அமைய முயற்சி செயவது தான் மனிதனின் இயற்கை  ..ஆதலால் வாழ்க்கை பயணம் சுகமாக கழிக்க பயனுள்ளதாக அமைய முயற்சி செய்யலாம்..

நேரம் நல்ல நேரம் ....

  நேரம் நல்ல நேரம்  ----------------------------- எல்லாம் வாய்த்த நேரம் ...கடவுள் கொடுத்த நேரம் ..மனிதன் தான் வினாக்குகிறான் கிடைத்த நேரம் ....